Saturday, April 30, 2011

கடுக்கரைகிராமத்தானின் முதல் விமானப்பயணம்.....1

படித்த கிராமத்தானின் முதல் அனுபவம்....1
.by Thankappan Arumugaperumal on Thursday, April 28, 2011 at 6:27am.

சனிக்கிழமை,எல்லாவாரங்களிலும் வரும்

இனிய நாள்......

அனைவருக்கும் பிடிக்கும் நாள் காரணம்

மறுநாள் காலை,மாலை தொல்லைஇல்லாநாள்.

எனக்கு எல்லா நாளுமே ஞாயிறுதானே.என்

மனம் கவர்ந்த நாள் சனிக்கிழமை.அதுவும் ஏப்ரலில்

ஒன்பதாம் நாள் வந்த சனிக்கிழமை மறக்கமுடியாத

இனிய நாள்.....வானில் நான் என் மனைவியுடன்

பறந்த நாள்...இனியும் நான் இதுபோல் பயணம்

செய்யலாம், இருப்பினும் முதல் விமான அனுபத்தை

தந்த சனிக்கிழமை ஒரு வசந்த நாள் எனக்கு....

அந்த சனிக்கிழமை அதிகாலையில் துயிலெழுந்து

ஏழு மணிக்கே பெங்களூருவில் வீட்டில் இருந்து

என் மருமகன் துணையுடன் கிழம்பினோம்.....

ஒன்பது மணிக்குமுன்பே விமானநிலையத்தில்...

மருமகனின் அனுபவ ஆலோசனைகளைப் பெற்ற

நான் பல தடவை போனது பொன்ற பாவனையுடன்

பாதுகாப்பு சோதனைகளையெல்லாம் வெற்றிகரமாக

முடித்து விட்டு காத்திருப்போர் அரங்கை அடைந்தோம்

அழகான இருக்கைகள் எங்களை அழைத்தன......

எனக்கு மாத்திரமே தெரிந்த படபடப்பும் நெஞ்சத்துடிப்பும்

சீரான நிலைக்கு வந்தபின் தான் என் கண்கள் தன்

பணிதனை ஆரம்பித்தன...மேலும் கீழும் வட்டமிட்டும்

கண்கள் பார்த்தன......என்மனமோ நான் காண்பதென்ன

கனவா?...... நம் நாட்டில் தான் இருக்கிறோமா.!...... ஒரே வியப்பு

நேரம் இருக்கிறது 9.50 க்கு......அரங்கில் எது வேண்டுமானாலும்

கிடைக்கும். எதையாவது வாங்கலாம்; ...ஆசையுடன் நாங்கள்

முதலில் T-shirt வாங்க நினத்து விலையைப் பார்த்தோம்.தலை

கிறு கிறுவென சுற்றியது......பேனா விலை கேட்டேன்.மினிமம்

ஆயிரம் ருபாய்........எதையாவது ஒன்று வாங்கியே ஆகணும்.

வாங்கினேன்.....அது ஒரு சிறிய கையடக்கமான புத்தகம்.

விலை 99/- (பெரியார் ஈ.வெ.ராமசாமி) ஆங்கில நூல்......

’காப்பி குடிப்போமா’..என் மனைவி கேட்டாள்....குடிப்போமே

என 50 ரூபாய் கொடுத்து இரண்டு காப்பி கேட்டேன்........

80/- என கூறினான். 30/- கொடுத்தேன்......ஒரு காப்பிக்கு 80/-

என்றான்.....கேட்டதைக்கொடுத்து காப்பியை வாங்கி சீனியை நானே எடுத்து

கலக்கி குடித்தேன்.(அழகான சிறிய ப்ளாஸ்டிக் கரண்டியால்).பேப்பர்

இலவசமாக எடுத்து படிக்கலாம் என என் அறிவுக்கு எட்டியபோது

மணி 9.50 .கைக்கு எட்டியது கண்ணுக்கு கிடைக்கல.ஒரு வழியாக

விமானத்தில் பணிபெண்ணின் அன்பாக ஆங்கிலத்தில் வரவேற்க நாங்கள்

போய் இருந்தோம்.விமானம் பறக்க ஆரம்பித்தது....என் மனம் சந்தோசவானத்தில்

பறந்தது......பணிப்பெண் ..... (தொடரும்)

No comments:

Post a Comment