Thursday, September 8, 2011

நானும் வெளிநாட்டுக்குப் போறேனே.......

2010 ஃபெப்ருவரி மாதம் ஒரு நாள் காலையில் என் மகன் போண் பண்ணி நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணியாச்சா ? எனக் கேட்டான். இல்லை யென்ற என் பதிலால் அவன் எரிச்சலடைந்ததை நான் உணர்ந்தேன்.

நானும் என் மனைவியும் பாஸ்போர்ட் எடுப்பதுபற்றி ஒரு முடிவெடுத்து நான் பாஸ்போர்ட் வாங்க என்னவெல்லாம் தேவை என்பதைத் தெரிந்து கொண்டேன். என் மனைவிக்கு T.C இல்லை. அதை வாங்க வேண்டும்.

குறத்தியறை பள்ளிக்கூடத்துக்குப் போனேன். நானும் படித்த ஸ்கூல் அல்லவா. இன்று அது வளர்ந்து மேல் நிலைப்பள்ளியாக இருப்பதைகண்டு மனசுக்கு சந்தோசமாக இருந்தது.

ஆபீஸ் வரந்தாவில் இருந்த ஒரு நோட்டீஸ் போர்டில் நன்கொடையாளர் பட்டியலில் என் தந்தையின் பெயர் இருக்கக்கண்டேன். கண்டதும் நான் அடைந்த சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

ஒரு தந்தையால் ஒரு மகன் அடையும் பெருமை..... இதைவிட என்ன தரவேண்டும் எனக்கு. இதே பூரிப்பில் அலுவலகம் போனேன். என்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன் கடுக்கரை ஆறுமுகம் பிள்ளையின் மகனென்று.

என் தேவையைக் கூறினேன்.அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்... 40 வருடம் முன்னமே படித்தவள் ஏன் இவ்வளவு நாள் certificate வாங்க வில்லையென.

தேடி எடுக்கணும் நாள் ஆகும். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார்கள். விவரமாக அவளது பெயர், படித்து முடித்த வருடம் எல்லாம் எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

எனக்கு சந்தேகம் வந்து விட்டது. நாளானதால் கிடைக்காதோ?

நோட்டறி பப்ளிக்கிடம் ஒரு affidavict வாங்கினால் போதுமே. ஒரு முன்னாள் மாணவர் அட்வகேட் அசோக் பதமராஜ் -ஐப் போய் பார்த்து அதை வாங்கினோம்.அதில் என் மனைவியும் கையெழுத்துப் போடணும். போட்டுவிட்டு திரும்பும் வழியில் அவள், “எப்பமாங்கும் பாஸ்போர்ட் கிடைக்கும். இப்பம் ஒண்ணும் குவைத்துக்குப் போகாண்டாம். பையப்போனாபோரும்” என்றாள்

“இன்னமும் அப்ளை பண்ணவே இல்லையே. நாளக்காப் போகப்போறோம் .பாஸ்போர்ட் கிடைக்கணும். அதுக்கப்புறம் விஸா நமக்கு கிடைக்கணும்.....”

“நான் அதுக்குச் சொல்லல்ல....அவனுக்கு மகனோ மகளோ பிறந்தால் நாம் அங்கு போனால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமா இருக்கும் . இப்பம் அங்க போய் என்ன செய்ய ”... அவளின் ஆதங்கம் என்னை ஊமையாக்கியது.

ஃபெப்ருவரி மாதம் 16-ம் தேதி திங்கள் காலையில் நாங்கள் இருவரும் Collector office-க்குப் போய் பாஸ்போர்ட் அப்ளை பண்ண புறப்பட்டுகொண்டிருந்தோம்.‘ஓம் நமச்சிவாயா....ring tone’ என் போணில் இருந்து வந்தது.

“அப்பா.... நானும் சுதாவும் நேற்றைக்கு ஆஸ்பத்திரிக்குப் போனோம். அவளுக்கு காச்சல் இருந்தது. அதுக்கு வேண்டிதான் போனோம் .pregnancy test- பார்த்ததில் positive எனச் சொன்னாங்க......யாரிடமும் சொல்லாண்டாம். ஒரு வாரம் கழிந்து சொல்லலாம்....”

நான் அவளிடம் சொன்னேன். என் தழுதழுத்தக் குரலின் நெகிழ்வு அவள் மனசையும் நெகிழ வைத்திருக்கும். அவள் கண்களில் நீர் தழும்பி வழிந்தது.

Collector office-க்குப் போனோம். முறையாக இருந்ததால் எங்களது விண்னப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. Acknowledgement slip ஒன்று தந்தார்கள்.

வீட்டுக்குத் திரும்பிவரும்போது அவள்,“ பாஸ்போர்ட் எப்பங்க கிடைக்கும்.... சட்டுணு கிடைக்க என்னமாம் செய்ய முடியுமா....? ஏன் பாஸ்போர்ட்ட முன்னாடியே எடுக்கல்ல.... எத்தனை நாளா தினேஷ் சொல்லீட்டிருந்தான். இப்பம் நம்ம அவுக கூட இருந்தா எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும்.” தாயுள்ளம்......என்னிடத்தில் குறை காண்கிறது......

‘சரிதானே. நான் எடுத்திருக்கணும்.........நாட்கள் நகர்ந்து அவர்கள் இந்தியா வந்து நாகர்கோவில் Dr. Punitha (George Mission Hospital) உதவியுடன் தாய்க்கு எந்த தொந்திரவும் கொடுக்காமல் சுகமாய்ப் பிறந்தான் எங்கள் பேரன். நான்கு வருடத்திற்குப்பின் 2010 அக்டோபர் 18 திங்களில் எங்கள் மனங்களை மகிழ வைக்க வந்தான் பேரன் பொன்சர்னேஷ்.

பேரன் ஜனுவரி 30-ம் தேதி குவைத்துக்குப் போனான் சுதாவுடன்.

ஜுனில் வந்தான் தாய் தந்தையுடன் இந்தியாவுக்கு மாமா சுதனின் கல்யாணத்துக்கு.

ஜூலையில் அவன் பெற்றோருடன் குவைத்துக்குப் போனான்.

ஜூலை மாதக் கடைசியில் எங்களுக்கு விசா வந்தது.

ஒரு L.I.C agent Mr.Lekhsmanan மூலம் குறத்தியறை பள்ளிக்கூடத்தில் என் மனைவியின் பெயர், வகுப்பு விவரங்கள்

அட்ங்கிய register book கிடைத்து விட்டது என தெரிந்தது.


எனது மனைவியின் பள்ளிக்கூட T.C -ஐப் போய் வாங்கிவந்தோம் .விசா கிடைத்து போலவே இதற்கும் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.நாளைக் காலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து குவைத்துக்கு செல்ல வேண்டும் பேரன்,மகன்,(மரு)மகள்-ஐக் காண.....

போய் வரட்டுமா ?

No comments:

Post a Comment