Friday, September 2, 2011

கடுக்கரையில் ஓவியர்கள்

கடுக்கரையில் மணமேடை அய்யாவு யாரென்று கேட்டால் சின்னப் பிள்ளைகளுக்குக் கூடத்தெரியும். நன்றாகப் படம் வரைவார். அந்தக் காலத்தில் நாட்கருது பானை என ஒன்று உண்டு. அந்தப் பானையில் பல தெய்வப் படங்களை
வரைவார்கள். அதை வரைவதில் திறமையானவர் இவர்தான்.

மணமேடை அலங்காரம், பந்தலில் தாளினால் செய்த பூமாலைகளால் அலங்கரிப்பது எல்லாமே அந்தப் பெரியவர் தான். பெயின்றினால் பெயர் பலகையும் எழுதுவார்.கோயில் வாகங்களில் அழகாக பெயின்ற் அடிப்பார்.

மணமேடை அய்யாவே அதிசயிக்கும் வகையில் அவருடைய படத்தையே வரைந்து அதிசயிக்க வைத்த ஒரு ஓவியர் உண்டு. அவர் தான் கீழத்தெரு சொர்ணப்பன். அவர் ரேடியொ, ஃபேன் போன்றவைகள் பழுதடைந்தால் இலவசமாக சரியாக்கி கொடுப்பார்.கலைச்சுடர் என்ற தே.வே. பகவதியின் கையெழுத்து பத்திரிகைக்கு படம் வரைந்து கொடுத்தவர் இவர்தான்.

முறையாக ஓவியக்கல்லூரியில் படித்து சிறந்த ஓவியராக இன்றும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருப்பவ்ர். தகர வீட்டு அய்யாவு என்ற எம்.எ. பெருமாள். இரண்டு பிரபல கம்பெனியில் ஓவியராகசென்னையில் வேலை பார்த்தார். கைரேகை பார்ப்பதிலும் ஜாதகப் பலன்,வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதிலும் வல்லவர்.அவ்வப்போது பத்திரிகைகளில் பலன்கள் எழுதுவார். 27 நட்சத்திரப் பலன் பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இவர் கடுக்கரை பாஸ்கரனின் மைத்துனர். டாக்டர் ஸ்ரீகுமாரின் மாமனார்.

காந்தி என்ற ஓவியர்தான் கீழகோவிலில் வாசலில் சாமியின் பெயரை பெரியதாக எழுதினார் . இவர் ஆத்துப் பாறை குமரேசன் என்பவரின் மகன்.

No comments:

Post a Comment