Monday, March 5, 2012

நான் கண்ட எனதன்பு பேராசிரியர் எல்சிசார்


11-7-1952-ல் ஒரு புதிய கல்லூரி உதயமாகி, 12-7-1952-ல் முதல் வகுப்பு ஆரம்பமானது. அந்நாளில் கல்லூரி முழுவதுமே விழாக் கோலத்தில் இருந்தது. நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் திரு.இலங்கத்து வேலாயுதம்பிள்ளை ,வடிவீஸ்வரம் செல்லையாபிள்ளைப் பாட்டா(திரு பூதலிங்கம் பிள்ளை),செட்டித்தெரு ராசா அண்ணாச்சி எல்லோர் முகத்திலும் வெற்றிப் புன்னகை. மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோர் மனத்திலும் ஒரே குதூகலம்.
காலை மணி 10முதல்11 மணி வரை ஒருவர் Intermediate Class நடத்துகிறார். அவர் தான் தாழக்குடி L.C.தாணு. ஆம்.....அவர் தான் முதல் ஆசிரியர்.... வெள்ளி விழா முதல்வரும் அவரே.

 தனது 36 வருட கல்லூரிப் பணியில் 17 வருடம் முதல்வராய் அதுவும் வெற்றிகரமாக கல்லூரிப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
நான் கண்ட பேராசிரியரைப் பற்றிய என் நினைவுகளில் இருந்து சில துளிகள்.......
நான் 1963-ல் PUC படிக்கும் போது ஒரு நாள் நான் அவரை சந்தித்த போது, அவர் என்னிடம்,” கடுக்கரைக்காரன் தானே நீ…..நல்லாபடிக்கணும்….ம்….ம்….
வாலையெல்லாம் சுருட்டி வச்சுக்கணும்…..இங்கேயெல்லாம் காணிக்கக்கூடாது…… ஒட்ட நறுக்கீருவோம்”.
அவருடைய ஆஜானுபாவானத் தோற்றமே பயமுறுத்தும்………அவரது இந்தப் பேச்சு என்னை கூடுதலாகவே பயமுறுத்திற்று….. “யார் இவர்…. என்னைப் பார்த்ததும் ஏன் அப்படிச் சொல்லணும்…….நம்ம க்ளாஸுக்கு தான் இவர் வர மாட்டாரே……”
1962 முதல் முதல்வராய் இருந்த V.M.ஸ்ரீதரமேனோன் நிர்வாகப் பிரச்சினையால் 1969-ல் இக்கல்லூரியில் இருந்து வெளியே போன சமயம் L.C சார் தான் முதல்வராக வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போனது. 1970 ஆரம்பத்தில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டு 1971-ல் அவர் முதல்வராகிறார்.அப்படி ஒரு நிர்வாக மாற்றம் ஏற்படவில்லையெனில் அவர் முதல்வராவதும் தள்ளிப்போயிருக்கும்.அந்த நிர்வாகக் குழுவில் இருந்த என் தந்தை தான் முதல்வராவதற்கு முக்கிய காரணம்.
1973-ல் எனக்கு இந்துக்கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் வேலைக்கான ஆர்டர் தரவில்லை. ஒரு மாதம் கழிந்தபின் என்னை அழைத்து முதல்வர் ஆர்டரைத் தந்தார். தந்து விட்டு அவர் சொன்னது:- “ நீ எங்களை எல்லாம் நல்ல ஏமாத்திட்டியே ………நீ shortல்லா…. நீ எப்படி சமாளிக்கப் போறெ…..பயந்து போய் உன்னால முடியாதுன்னு போயிடுவே….
எப்படி பாடம் நடத்தப் போகிறாய்……உன்னால முடியாது நான் உட்பட நினைச்சேன்………கடுக்கரைக்காரன்லா……… நல்ல பேர் உனக்கு…….ஒரு மாசத்திலேயே  Maths  பையன்கள் உன்னை மிகவும் பெரிசாய் சொல்றாங்க…. நீ கண்டிப்பாகவும் இருக்கிறாய்…….Keep it up…” என்று சொல்லி Shake hand தந்து வாழ்த்தினார்.
அடுத்த வருடமே PUC ‘F’ batch-க்கு (Maths,Economics, commerce ) group tutor-ஆக என்னை நியமித்தார்….  இப்படி என்னை நியமித்தது அந்த சமயத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாகவே இருந்தது. நான் தந்த பொறுப்பினை நிறைவாகவே செய்தேன்……..
Cent present pass ( IB.Sc Maths ) க்கு பரிசு தந்து ஊக்குவித்தார் முதல்வர்…..
அவருடைய கடைசி இருவருடம் கல்லூரி விழாவில் கொடுக்கும் Certificate களை என்னைத்தான் எழுதச் சொன்னார்.
Staff Assoiciation Secretary ஆக நான் இருந்த போது  staff council கூட்டத்தில் கலந்து கொண்டு ,” பணியாளர்கள் காலையில் தாமதமாக வருபவர்கள் Leave தான் எடுக்க வேண்டும் என்பதனை மாற்றி late register போட வேண்டும் என்று சொன்னதை வரவேற்று நடைமுறைப்படுத்தினார்.
1979-ல் அவர் தலைமையில் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்தோம்…
25-12-1981-ல் மறைந்த எனது தந்தையாரின் மறைவை ஒட்டி மறுநாள் தான் வரமுடிந்த LC சார் தனது கண்ணீரை அஞ்சலியாக செலுத்தியதைக் கண்டேன்.
 நான் ஆங்கிலப் பத்திரிகைகளில் Letters to the Editor பகுதியில் எழுதும் கடிதங்களைப் படித்ததும் என்னைக் கண்டு அது பற்றிப் பேசி என்னை மேலும் எழுத தூண்டியவர் அவர் தான். எழுத வேண்டும் என்ற என் ஆசைக்குக் காரணமே அவர் எழுதியதைப் பாத்துதான்........

1987-ல் நல்லாசிரியர் விருது பெற்ற LC சார், 1988-ல் ஓய்வு பெற்று சென்றார்……. என் மனதில் என்றுமே உயர்வாய் நிற்கிறார்.

1 comment:

  1. பேராசிரியர் செண்பகராமன்புதூர் NSK Polytechnic கல்லூரியில் நிர்வாகக் குழுவில் இயக்குனராக இருந்த நேரம். எனது மகனுக்கு முதல் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் போட்டு பரிந்துரை செய்தார்...
    கையொப்பம் வாங்க என் மகன் தனியாகத் தான் போனான்.

    அவர் அவனை மிகவும் அன்பாக நடத்தி வாழ்த்தும் கூறி Admission-ம் வாங்கிக் கொடுத்தார்...

    ReplyDelete