Monday, February 4, 2013

என் பள்ளியில் நான் கண்ட ஆசிரியர்கள்

1961-62-இல் பூதப்பாண்டி பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பத்தாம் வகுப்பில் சேரும்போது பொறியியல் பிரிவு,விவசாயப்பிரிவு என bifurcated course-இல் சேர்ந்துபடிக்கலாம்.கணிதத்தில் அதிக மார்க்கு எடுத்தவர்களுக்கு பொறியியல்பிரிவு கிடைக்கும்.சயின்ஸில் கூடுதல் மார்க்கு எடுத்தவர்களுக்கு விவசாயப் பிரிவு கிடைக்கும்.
இந்த இரண்டு பிரிவு மாணவர்களும் ஒரே வகுப்பில் தமிழ் ,ஆங்கிலம், படிப்பார்கள். Standard  X-B.
Standard X-A இல்பெண்கள்  படிப்பார்கள்.இவர்களுடன்  4 அல்லது 5 பையன்களும் சேர்ந்தார்கள்.

நானும் குறத்தியறையில் சேர்ந்து படித்த கண்ணனும் பூதப்பாண்டி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தோம். அவன் 9-A.   நான் 9-B. வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சேர்ந்து தான் சாப்பிடுவோம்.... ஒன்றாகவே பள்ளிநேரம் முடிந்ததும் குறத்தியறை விலக்குவரை நடந்து செல்வோம்.அதன்  பிறகு  நான் கடுக்கரைக்குப் போவேன். அவன் மேல்கரை நோக்கிச் செல்வான்.

அடுத்த வருடம் தொடக்கத்தில் நாங்கள் இருவரும் பத்தாம் வகுப்பில் படிப்பதற்கான பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது நான் எதனையும் தேர்ந்தெடுக்காமல் இருந்து விட்டேன். கண்ணன் என்னிடம் சொன்னான்.” நான் பொறியியல் பாடம் எடுத்துப் படிக்க பேர்  கொடுத்திருக்கேன். நீயும் பேர் கொடு. நாம் இருவருமே ஒரே வகுப்பில் இருந்து படிக்கலாம்;  மேலும்  நமக்கு  உயிரியல் ,தாவரவியல் பாடங்கள்  கிடையாது , சமூகவியல் பாடம் படிக்கணும்  ஆனால்  பரிட்சை எழுதினால் போதும் 35 மார்க்குக்கு  குறைவாக எடுத்தாலும்  போதும் ” என்றான்.

நானும் அவன் சொன்னான் என்பதற்காகவே பேர் கொடுத்தேன். விதி வேறுவிதமாக செயல் பட்டது. மார்க்கு அடிப்படையில் தேர்வு செய்ததில் எனக்கு நான் கேட்ட பாடப்பிரிவு  கிடைத்தது. அவனுக்கு கிடைக்கவில்லை.மிகவும் மனம் நொந்து போயிற்று. நான் எனது வகுப்பு ஆசிரியரிடம் போய் எனக்கு பொதுப் பிரிவுப் பாடமே போதும் என்று முறையிட்டேன். பலனில்லை....... நானும்  அவனும் வெவ்வேறு வகுப்புகளில் எங்கள் படிப்பைத் தொடர்ந்தோம்

நான் Composite mathematics ,General Engineering,Engineering Science பாடங்கள் படித்தேன்.கணித பாடம் எடுத்த ஆசிரியர் அல்போன்ஸ்ராஜ்.,General Engineering பாடம் சென்னையில் இருந்து சந்தானம் என்பவர் எடுத்தார் . அவர் பாலிடெக்னிக் படித்தவர் .

பத்தாம் வகுப்பு முடிந்து 11 -ஆம் வகுப்பு ........

கணிதப் பாடம் எடுத்தவர் புதியதாக வந்த தலைமை ஆசிரியர் மாதவ ஐயர் . மிக நன்றாக பாடம் நடத்தினார். அவர் என்னிடம் வகுப்பில்  x axis ,y axis பற்றி சொல்லி ஏதோ ஒரு கேள்வி கேட்டார் . தெரியாது என்றதும் அவருக்கு மிகவும் கோபம் வந்து என்னைப் பார்த்து, “ நாணம் இல்லையாடா உனக்கு ? பத்தாம் கிளாசில படிச்சது தெரியாம நிக்கிறியே.......”

“போன வருஷம் படிக்கல்ல ?......”  நானும் சக மாணவர்களும் சேர்ந்து சொன்னோம்

யார் உங்களுக்கு பத்தாம் வகுப்பில் கணக்கு எடுத்தா?.....

அல்போன்ஸ்ராஜ் சார்.......

அடுத்த நாள் மாலை 4 மணிக்கு Extra class. நடக்கும். க்ராப் நோட்டு வாங்கிற்று வாங்க என சொன்னார். மறுநாள் மாலை 4 மணிக்கு வகுப்பில் காத்திருந்தோம்.

சார் வந்தார்..... வந்தவர் அல்போன்ஸ் சார்......

சிரித்துக் கொண்டே பாடம் நடத்தினார்......... ஒரு வாரம் வகுப்பு.......

வருட முடிவில் Group  போட்டோ,Social Day ....... பிரியா விடை பெற்று எல்லோரும் Autograph வாங்கினோம்......

எங்கள் வகுப்பாசிரியர் விடுமுறையில் அல்லது மாற்றலாகிச் சென்றாரா...? தெரியாது.....  புதிய ஒருவர் அந்தப் பொறுப்பில் இருந்தார்....மாணவர்கள் அவரிடம் ஆட்டொகிராப் வாங்க போனோம்.

அவர்,” என்னடா...... என்னை உங்களுக்குத் தெரியாதே!.........”

அமைதியாய் நின்றோம்.

என்னமோ எழுதி கையெழுத்துப் போட்டார்.....

என் முறை வந்ததும் அவரிடம் கொடுத்தேன்.

“என்னடே...... நீ ...... வளரவே இல்ல.... சின்ன பையனா இருக்க..... உனக்கெல்லாம் Engineering College -ல  இடம் கிடைக்காதே... உனக்கு எந்த ஊரு...?”

”கடுக்கரை” நான் சொன்னேன்.

சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்த அவர் ,” ஆறுமுகம் பிள்ளை  அண்ணாச்சியின் மகனா....!” என்றார்.

நல்ல படிக்கணும். என் ஆட்டோக்ராபில் எழுதி என்னிடம் தந்தார்.

  ”உயரமாக வளர்.... உயர்ந்த எண்ணம் கொள்” .........எழுதியவர் பழனிவேல் சார்.

பள்ளிப் பருவம்......... விடை பெற்றுச் சென்றது......






No comments:

Post a Comment