Wednesday, December 24, 2014

சிங்கப்பூர்-----5..... நீரிலும் நிலத்திலும் சென்ற வாகன வாத்து







சிங்கப்பூரில் கண்டு களிக்க பல இடங்கள் உள்ளன.எல்லாவற்றையுமே ஏழு நாட்களில் பார்த்து விடவேண்டும் அதுவும் மழைக் காலமான நவம்பரில் என்றால் இயலாத காரியம் என்பதை உணர்ந்த நாங்கள் தேர்ந்தெடுத்துதான்  எங்கள் நிகழ்வுகளைத் தீர்மானித்தோம் அப்படி போனதில் எனக்கு மிகவும் பிடித்தது DUKW Tour...

தார்ச் சாலையிலும் தண்ணீரிலும்....
அதற்கு முன்பே நகர்வலம் போகலாம் என்று போய் வந்து அடுத்துள்ள டக்வாக் குக்கு வேண்டி காத்திருந்தோம்....இருந்த அந்த இடம்  சிங்கப்பூர் பறக்கும் ராட்டினம் மையம் (Singapore Flyer) நாங்கள்
நால்வரும் சிற்றி டூர்ஸ் - பச்சை நிற பஸ்ஸில் பயணம் செய்தோம்.மழைகாரணமாக எங்குமே இறங்காமல் பஸ் பயணம் தொடர்ந்தது...அதனால் ஒரு மணிக்கூரில் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்து  அடுத்த ஆரஞ்ச் நிற பஸ் பயணம் தொடங்கியது மழை இல்லை... ஆனாலும் நாங்கள் எங்கும் இறங்கி இடங்கள் எதுவும் பார்க்கவில்லை...

கொண்டு வந்திருந்த  உணவை அங்கு ஒரு இடத்தில் போய் தமிழர் ஒருவர் அனுமதி பெற்று அருந்தினோம்..... 2,30 க்கு அடுத்து பயணம் செய்யும் இடத்துக்கு போனோம் நாங்கள் இருவரும்..........எங்களுடன் வந்தஅண்ணனும் மதினியும்  ஏற்கனவே டக் டூர் போய் வந்ததால் எங்களுக்காக வெளியே காத்திருப்பதாகக் கூறினார்கள்   .

மூன்று மணிக்கு டக் வாக் ஆரம்பம் ஆனது......என்னுடைய வியப்பும் ஆரம்பம் ஆனது.... நான் நினத்தது ஏரியின் கரையோரம் நம்மை அழைத்துப் போய் அங்குள்ள போட்டில் நம்மையேற்றி அழைத்துச் செல்வார்கள் என  நினைத்தேன்.

நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் (சிங்கப்பூர் ஃப்ளையர்) ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது.ஒரு சின்ன ஏணி...அதைப் பயன்படுத்தி ஏறி உள்ளே பார்த்தால் போட் வடிவமைப்பில் இருக்கைகள் இருந்தன....ஆம் அது Two in One காரும் படகும் ஒன்றில்.......சாலையில் ஓடும் பஸ் நீரிலும் பாய்ந்தோடும்....

வசதியான இருக்கைகளில் அமர்ந்தோம்.சாலையில் அது பயணித்தது..... ஒரு கைடு அழகான அவர்தம் ஆங்கிலத்தில் வெளியே காண்பவைகள் பற்றி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பேச்சு நகைச்சுவை கொண்டதாக இருந்தது.....அவர் ஆங்கிலமும் நம் ஆங்கிலமும் இருவருக்குமே புரியாது......சிங்கப்பூர் இங்க்லீஷ்.....சிங்க்லீஷ் ......எனக்குப் புரிந்தது கொஞ்சம்......

மழைத்தூறல்  சலிப்பைத் தந்தது....நாங்கள் முக்கியமான இடத்தைக் கடந்து செல்லும்போது  காணும் கட்டிடங்கள் பற்றி வர்ணனையாளர் விவரித்துக் கொண்டே வருவார்....மேலே காணும் படம் சென்ற பாதையின் வரைபடம்...சிவப்பு  கோடு சாலை வழி சென்றதையும் நீலக்கோடு நீர்வழி சென்றதையும் காட்டுகிறது.....

நீர்ப்பரப்பை அடையும் போது பஸ் BOAT ஆக மாறி பாய்ந்தோடும்.அந்தச் சமயத்தில் வர்ணனையாளர் குதூகலப் பேச்சால் நம்மை ஆனந்தப் பரவசத்துக்கு அழைத்துச் செல்வார்....சில  முக்கியமான இடங்களில் போட்  நிதானமாகச் செல்லும் போது நாம் படம் எடுக்க வசதியாய் இருக்கும்....

வர்ணனையாளர் சொன்னதில் என் கவனத்தில் வந்தது சில....

யாராவது சிங்கப்பூரில் போலீசைப் பார்த்தீர்களா..? என்று  முப்பது பேருக்கும் குறைவாக இருந்த எங்களைப் பார்த்துக் கேட்டார்....

அவர் பக்கம் அமர்ந்திருந்த ஒருவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தவர் போல் தன்னைக் காட்டிவிட்டு சொன்னார்....Oh ! you are Lucky... Singapore is a low crime country in the world.  You can never see any police unless called for any problem...

அப்போதுதான் நானும் உணர்ந்தேன்... எங்கும் ....ட்ராபிக் உள்ள இடங்கள் எதிலும் மருந்துக்குக் கூட ஒரு போலீஸ் என் கண்ணில் படவில்லை.

சிஙக்ப்பூரின் வளர்ச்சிக்கு காரணமான முன்னாள் பிரதமர் பற்றிச் சொல்லும்போது  தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர் அவரது மகன் என்றும் சொன்னார்.
சிங்கப்பூர் என்றதும் நினவுக்கு வரும் MERLION பற்றி விவரித்தார்...மெர் என்றால் மீன் என்று சொன்னபோதுதான் அந்த வடிவம் என் மனதுக்குள்
வந்தது...சிங்க முகம் மீன் உடல்..... பயணம் இனிதாக முடிந்தது.....




No comments:

Post a Comment